Wednesday 5 July 2017

இன்னொரு சான்ஸ்..

ஒரு அழகான இளம்பெண், தான் கர்ப்பமாகி இருப்பதை உணர்ந்தாள்.

பயந்தாளா..? அதுதான் இல்லை. நவீன உலகத்துப்பெண் என்பதால், தன் அன்னையிடம் தான் கர்பமான செய்தியைச் சொன்னாள்.

அவளுடைய அன்னை, மிரண்டுபோனதுடன், அதீதக் கோபத்துடன் காட்டுக் கத்தலாக அவளிடம் கேட்டாள்:

“உன்னுடன் பழகும் எந்தப் பன்றி இந்தக் காரியத்தைச் செய்தது..?”

“இரு, அவனை வரச்சொல்கிறேன்..!!” என்று அமைதியாகச் சொன்னவள், தன் கைபேசியை எடுத்து ஒருவனுடன் பேசினாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் அவள் வீட்டு வாசலில், மிகவும் விலை உயர்ந்த சிவப்பு வண்ண பெராரி கார் வந்து நின்றது.

அசத்தலான தோற்றத்துடன் ஒரு இளைஞன் வண்டியை விட்டு இறங்கினான். விலை உயர்ந்த ஆடைகளை அணிந்திருந்தான். ஊரையே தூக்கும் அளவிற்கு நறுமணம் அவனுடன் சேர்ந்து வந்தது.

ஆனால் அவளது வீட்டிற்குள்ளே மிகவும் பவ்வியமாக வந்தான்.

வந்தவன், அந்தப் பெண்ணின் தாய், தந்தை, மற்றும் அவளுடன், வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்தான்.

சற்றும் யோசிக்காமல், கவலைப்படாமல், பேசலானான்.

“உங்கள் பெண் சற்றுமுன் என்னிடம் தன்னுடைய புதுப் பிரச்சினையைச் சொன்னாள். நான் என்னுடைய சில சொந்த மற்றும் குடும்பப் பிரச்சினைகளால், அவளைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. ஆனாலும் நடந்த தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.

“அவளுக்கு பெண் குழந்தை பிறந்தால், ஒரு பங்களா, ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், ஒரு கோடி ரூபாய்க்கு வங்கி வைப்புத்தொகை தருகிறேன்..!!”

“ஆண் குழந்தை பிறந்தால், வாரிசுச் சிக்கல் வரக்கூடாது. அதனால் எங்களுக்கு சொந்தமான தொழிற்சாலைகளில் இரண்டை, உங்கள் மகளுக்கு எழுதித் தருகிறேன். இரண்டு கோடி ரூபாய் வங்கி வைப்புத்தொகையாகத் தருகிறேன்..!!”

“இரட்டைக் குழந்தைகள் என்றால், சொன்னவற்றை இரண்டு மடங்காகத் தருகிறேன்..!!”

“அதேசமயம், இடையில் கர்ப்பச் சிதைவு ஏற்பட்டாலோ அல்லது குழந்தை பிறப்பு சிக்கலாகி, குழந்தை உயிருடன் பிறக்காவிட்டாலோ, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்லுங்கள்..!!” என்று அமைதியாக சொல்லி முடித்தான்.

இந்த இடத்தில், அதுவரை அமைதியாக இருந்த அந்தப் பெண்ணின் தந்தை, எழுந்து நின்று, அவனுடைய தோளில் ஆறுதலாகத் தட்டிக் கொடுத்துவிட்டுச் சொன்னார்:


“You can try again..!!”