Monday 3 July 2017

காண்டம் வாங்கியவன் எங்கே போகிறான்..?

அந்த மருந்துக் கடைக்கு ஒருவன் வந்தான்.

“காண்டம் வேண்டும்..” என்று கேட்டான்.

காண்டத்தை வாங்கிக்கொண்ட பின்னர் கடை ஓனரைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான். படு சத்தமாக சிரித்தபடி அங்கிருந்து போனான்.

அந்த கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.

அடுத்த நாளும் அவன் வந்தான். மறுபடியும் காண்டம் கேட்டான்.

வாங்கியவுடன் மறுபடியும் பொங்கிப் பொங்கிச் சிரித்தான். கடைக்காரரைப் பார்த்து பலமாக சிரித்து விட்டு கிளம்பிப் போனான்.

கடைக்காரர் டென்ஷனாகி விட்டார்.

“ஏன் இவன் இப்படிச் செய்கிறான் என்று புரியவில்லையே..!!” என்று குழம்பினார்.

பிறகு வேலைக்காரப் பையனை அழைத்து, “டேய் இங்கே பார், மறுபடியும் இந்த ஆளு வந்தா, அவன் காண்டம் வாங்கி விட்டுப் போகும்போது எங்கே போகிறான் என்பதை பின்னாடியே போய் கண்டுபிடிச்சுட்டு வந்து என்கிட்ட சொல்லு..!!” என்றார்.

வேலைக்காரப் பையனும், “சரி..” என்றான்.

அடுத்த நாளும் வந்தது. அந்த ஆளும் வந்தான். காண்டம் வாங்கினான், சிரித்தான், கிளம்பிப் போனான்.

கடைக்காரர், வேலைக்காரப் பையனை அழைத்து, “போய் பாலோ பண்ணு..!!” என்று அனுப்பி வைத்தார்.

பையனும், போனான். ஒரு அரை மணி நேரம் கழித்து திரும்பி வந்தான்.

அவனை அழைத்த கடைக்காரர், ஆவலுடன், “பின்னாடியே போனியே, அவன் எங்கே போனான்னு கண்டுபிடிச்சியா..?” என்றார்.


உடனே வேலைக்காரப் பையன் பலமாக சிரித்துக்கொண்டே சொன்னான், “உங்க வீட்டுக்குத்தான் சார்..!!”