Saturday 12 August 2017

ஹெட்மாஸ்டரின் டெஸ்ட்..

சுட்டிப் பையன் சின்னா ரொம்ப க்யூட். ஆனா அவனுக்கு ஒரு குறை.

அதாவது அவனோட மக்கு அக்கா மூனாவது படிக்கறா. புத்திச்சாலியான தன்னை மட்டும் ஒண்ணாங்கிளாஸ்லே சேத்து விட்டுட்டங்களேன்னு..!!

ஒரு தடவை சின்னா, இதை டீச்சர்கிட்டே சொல்லி ரொம்ப வருத்தப்பட்டான்.


டீச்சரும் ஒருநாள் இதை ஹெட்மாஸ்டர்ட்ட சொன்னாங்க.

அவரும் சின்னா எந்த அளவு புத்திசாலின்னு சோதிச்சு பார்க்க தன் ரூமுக்கு அழைச்சுட்டு வரச்சொன்னார்.

சின்னாவும் டீச்சரும் ரூமுக்குள் வந்ததும்..

ஹெட்மாஸ்டர்: டீச்சர்.. இவனை என் முன்னால நாலஞ்சு கேள்வி கேளுங்க பார்ப்போம்..!!

டீச்சர்: 2ம் 2ம் எவ்ளோ..?

சின்னா: 4.

டீச்சர்: 47ம் 54ம் எவ்ளோ..?

சின்னா: 101.

ஹெட்மாஸ்டர்: என்ன டீச்சர் இது..? கொஞ்சம் கடினமா கேளுங்க..

டிச்சர்: என் சட்டைக்குள்ள இருக்கு. உன் சட்டைக்குள்ள இல்லே..!! அது என்ன..?

சின்னா: தாலி..!!

டீச்சர்: உன் பேண்ட்டுல இருக்கு.. என் (சுடி) பேண்ட்டுல இல்லே..!! அது என்ன..?

சின்னா: பாக்கெட்..!!

டீச்சர்: உங்கம்மாவும் அப்பாவும் ஏன் தனி ரூம்ல படுத்துக்கறாங்க..?

சின்னா: எனக்கு ஏ.சி. ஒத்துக்காது..!!

டீச்சர் ஏதோ மேலும் கேட்க முற்பட..


ஹெட்மாஸ்டர்: போதும் டீச்சர். இவனை 3 என்ன, 5ம் கிளாஸ்லேயே தூக்கிப் போடுங்க. கடைசி 3 கேள்விக்கு எனக்கே தப்பு தப்பாத்தான் பதில் தெரிஞ்சது. இவன் ப்ரில்லியண்ட்தான்..!!